மதரஸா ரஹூமா பரக்கத் மக்தப் & நிஸ்வான் மதரஸா 2023-2024-ஆம் ஆண்டுக்கான அட்மிஷன் ஆரம்பம்!
மதரஸா ரஹூமா பரக்கத் மக்தப்& நிஸ்வான் மதரஸா மூன்று ஆண்டுகள் நிறைவு மற்றும் 2023-2024-ஆம் ஆண்டுக்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் ரஹூமா பரக்கத் என்ற மக்தப் & நிஸ்வான் மதரஸா ஹாஜி N.S.அயூப்கான் அவர்களால் நிறுவப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி துவக்கப்பட்டது.

தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று ரமலான் விடுமுறைக்குப்பின் வரும் 01/05/2023 திங்கள் அன்று திறக்கப்படுகிறது. மேலும் 2023-2024-ஆம் ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.

நடைபெறும் வகுப்புகள்

மக்தப்: சிறுவர்-சிறுமியர் (இருபாலர் ) வகுப்பு
  • 1 முதல் 5 வரை பிரைமரி வகுப்புகள்
  • பாலிகான் ஆண்கள் வகுப்பு
  • பாலிகான் பெண்கள் வகுப்பு
  • பெண்களுக்கான பட்டம் பெறும் வகுப்புகள்

3 ஆண்டு முஅல்லமா வகுப்பு

இரண்டாண்டு முபல்லிகா (ஆலிமா)வகுப்பு
(மூன்றாண்டு முஅல்லமா முடித்தவர்களுக்கு மட்டும்)

காரிஆ வகுப்பு
(தஜ்வீத்,கிராஅத் பயிற்சி)

பெண்களுக்கான குர்ஆன் (ஹிப்ளு)
மனன வகுப்பு (விரைவில்)

சிறப்புச்சான்றிதழ் வகுப்புகள்
இஸ்லாமிக் ஹோம் சைன்ஸ் (Islamic Home Science)

இல்மு மீராஸ்
(வாரிசுரிமை சட்டங்கள்) நடப்பாண்டு முதல்

மதரஸாவின் சிறப்புகள்:
  • மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் பெண்களுக்கான  சிறந்த மார்க்க கல்வி நிறுவனம்.
  • இதுவரை 33 முஅல்லமாக்களும் 4 காரிஆக்களும்  பட்டம் பெற்றுள்ளனர்.
  • அரபி, உர்தூ மொழிகளில் பேசவும் எழுதவும் ஊக்குவித்தல்.
  • பேச்சாற்றல் திறன் மேம்பட வாரம் ஒரு முறை சிறப்பு சொற்ப்பொழிவு பயிற்சி  மன்றம்.
  • குர்ஆன் தஜ்வீதுக்கு அதிக முக்கியத்துவம்.
  • பயிற்சி பெற்ற ஆலிமா, காரிஆ ஆசிரியைகளைக்கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
இச்சேவை கியாமத் நாள் வரை நடைபெற துஆ செய்வோமாக. ஆமின்

தகவல்:
மௌலவி,பாஜில், காரி, M.J. முகமது மைதீன் தாவூதி, தலைமை ஆசிரியர், மதரஸா ரஹூமா பரக்கத் ஏம்பக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments