கோபாலப்பட்டிணத்தில்‌ சேவை செய்து வருகின்ற பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு GPM மீடியா-வின் கோரிக்கை!கோபாலப்பட்டிணத்தில்‌ சேவை செய்து வருகின்ற பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு GPM மீடியா கோரிக்கை வைக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள எழில் மிகு அழகு கொண்ட கடற்கரை கிராமம் தான் கோபாலப்பட்டிணம். நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் சேவை செய்து வருகின்ற பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு GPM மீடியா ஓர் கோரிக்கையை முன் வைக்கிறது.

பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகளில் சமூக சிந்தனையுடன் செயல்படும் சகோதரர்களே, கோபாலப்பட்டிணம் தெருக்களின் உட்பகுதிக்குள் அமைந்திருக்கும் சாலைகள் நிறைய ஆபத்தான வளைவுகள் கொண்டவைகளாக உள்ளன. எதிரெதிரே வரக்கூடிய வாகன ஓட்டிகள் வளைவுகளில், வளையும் வேளையில் பல தருணம் சப்தம் எழுப்புவதில்லை, இதனாலேயே சிறு விபத்துகளும், அசம்பாவிதங்களும் ஏற்பட நேரிடுகிறது.

இவற்றினை முற்றிலுமாக கலையும் வண்ணம் ஓர் சிறிய முயற்ச்சியாக நமது ஊரில் குறிப்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் மூன்று சாலை சந்திப்பு, கறிக்கடை அருகில் உள்ள நான்கு சாலை சந்திப்பு மற்றும் வாத்தியார் அப்பா வீட்டு ஆகிய பகுதியில் பாதுகாப்பு பிரதிபலிப்பு கண்ணாடி (SAFTY REFLECTION MIRROR) முதற்க்கட்டமாக பொருத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். மேலும் இதுபோல் நமதூரில் எங்கெங்கெல்லாம் ஆபத்தான சாலை சந்திப்புகள் உள்ளனவோ அங்கெல்லாம் இந்த கண்ணாடிகள் பொருத்துவதற்க்கு பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் இந்த பணியை செய்ய வேண்டும் என்பதே GPM மீடியாவின் கோரிக்கையாகும்.

கோபாலப்பாட்டிணத்தில் GPM மக்கள் மேடை, GPM பொதுநல சேவை சங்கம், என்றும் உதவும் கரங்கள், உமர் முக்தார் நற்பணி மன்றம் போன்ற பொதுநல மற்றும் சமூக நல அமைப்புகள் இயங்கி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments