தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது கரூரில் 104.9 டிகிரி பதிவு




தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த 4 நாட்களாக வெயில் வாட்டி எடுக்கிறது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவுவதால், சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை உயர்ந்து பதிவாகி இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருந்தது. அதிகபட்சமாக கரூரில் 104.9 டிகிரி பதிவாகி இருந்தது. நேற்று தமிழ்நாட்டில் பதிவான வெயில் அளவு வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 96.8 டிகிரி (36 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

கோவை - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

கடலூர் - 95.9 டிகிரி (35.5 செல்சியஸ்)

தர்மபுரி - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

ஈரோடு - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)

கன்னியாகுமரி - 92.48 டிகிரி (33.6 செல்சியஸ்)

கரூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

கொடைக்கானல் - 68.18 டிகிரி (20.1 செல்சியஸ்)

மதுரை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 95 டிகிரி (35 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

சேலம் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)

தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

திருத்தணி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

தூத்துக்குடி - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

ஊட்டி - 78.8 டிகிரி (26 செல்சியஸ்)

வால்பாறை - 84.2 டிகிரி (29 செல்சியஸ்)

வேலூர் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments