பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியீடு: தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!




மே 8-ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 7-ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ்2ல் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடாமல், நீட் தேர்வு முடிந்த மே 7-ம் தேதிக்கு பின், பிளஸ்2 தேர்வு முடிவை வெளியிடலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிளஸ்2 தேர்வு முடிவு மே 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments