முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு காலி குடங்களுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நாச்சிகுளம் பகுதி மஜக வார்டு மெம்பர்கள்

            
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா உதயமார்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் 5வது வார்டு,6வது வார்டு,8வது வார்டு ஆகிய பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சனைகளுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி 

மனிதநேய ஜனநாயக கட்சி  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாச்சிகுளம்‌ தாஜுதீன், அஜிரன் அலிமா காதர், ராயல் காதர்  ஆகியோர்கள் இன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு காலி குடங்களை கையில் ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகம் நோக்கி சென்றனர்.

தங்கள் வார்டு பகுதிகளிலிருந்து காலி குடங்களுடன் புறப்பட்ட இவர்கள் பல்வேறு தெருக்கள் மற்றும்  கடைவீதி வழியாக  ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து சேர்ந்ததும் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன.

அதன் பிறகு நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் வார்டு மெம்பர்கள்  ஊராட்சி மன்ற தலைவரை நோக்கி கடந்த மூன்றரை வருடமாக  நாச்சிகுளம் பகுதி குடிநீர்  பிரச்சனைக்கு என்ன தீர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்ற  கேள்வியை  முன்வைத்தும்   இதுவரை குறிப்பிடும்  வகையில் எந்த தீர்வும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது என்றும்  ஊராட்சி மன்ற தலைவரிடம்  தங்கள் வருத்தங்களுடன்  வாதத்தை தொடர்ந்தனர்

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் மஜக வார்டு மெம்பர்களுடன் குடிதண்ணீர் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்ததின் அடிப்படையிலும் கடந்த -20-4-2023 அன்று TNTJ முன்னெடுத்த பணிகளில் கிடைக்கப்பெற்ற BDO மற்றும் ஜல் ஜீவன் திட்ட அலுவலகத்தின் பதில்களின் அடிப்படையிலும் ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வை நோக்கி நகர்வது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை இன்றுலிருந்தே தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments