வாட்ஸ்அப் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்! ஒரே நம்பரை 4 போன்களில் பயன்படுத்தலாம்! குரூப் அட்மினுக்கு பவர்



 



உங்களது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் நான்கு போன்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பர்க் இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார்

ஒரே வாட்ஸ் அப் எண்ணில் : வாட்ஸ்அப் ஆப்பில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி இரண்டு ஃபோன்களில் ஒரே நேரத்தில் வாட்ஸப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒரு வாட்ஸ் அப் அக்கவுண்டை நான்கு போன்களில் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. அதாவது இனிமேல், ஒரு வாட்ஸ் அப் எண்ணை ஒரே நேரத்தில் நான்கு போன்களில் லாக்-இன் செய்யலாம்

சில மாதங்களுக்கு முன்னர் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது வெவ்வேறு போன்களில் தங்களது ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாம். அதாவது ஒரே மொபைல் நம்பர் கொண்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை அதிகபட்சம் 4 சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

4 போன்கள் வரை : லிங்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக மெசேச், மீடியா, அழைப்புகள் என அனைத்துமே எண்ட்-டு-எண்ட் என்க்ர்பிட் செய்யப்படுகிறது. பிரைமரி மொபைல் போன் 14 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனில், மற்ற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப் தானாக லாக் அவுட் ஆகிவிடும்.

தற்போது வாட்ஸ்அப் கியூஆர் கோட் மூலம் பிரைமரி சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ்அப்பை இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் வாரங்களில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி மூலமாக எளிதாக லின்க் செய்துவிட முடியும். எதிர்காலத்தில் லிங்க் செய்யக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் குரூப் அட்மின் : மேலும், வாட்ஸ்ஆப் குரூப்பை சிலர் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், சேரக்கூடாது என்பதை குரூப் அட்மினே தீர்மானிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் தேவையற்ற செய்திகளை அனுப்பினால் அவற்றை, அட்மின் நீக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது வாட்ஸ்ஆப் பயனர் ஒருவர் இன்வைட் லிங்க்கை க்ளிக் செய்து எந்தவொரு குழுவுக்குள்ளும் நுழைய முடியும். ஆனால், இனி குரூப் அட்மின் ஒப்புதல் இன்றி, புதிய நபர்கள் குழுவில் இணைய முடியாது. இந்த புதிய அப்டேட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் வெளியிட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments