கோபாலப்பட்டிணம்-மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட கானல் நீர்!



கோபாலப்பட்டிணம்-மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் வெயில் தாக்கத்தால் கானல் நீர் ஏற்பட்டது.

பருவகால மாற்றத்தின் காரணமாக மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தில் பொதுவாக மே, மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலங்களில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நிலையில் பருவகால மாற்றத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல்-கோபாலப்பட்டிணம் பகுதியில் மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரிக்கிறது.

மீமிசல்-கோபாலப்பட்டிணம் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாலையில் அனல் காற்று வீசுகிறது. மேலும் இதனால் சாலைகளில் கோடை காலத்தை போல கானல் நீர் தோன்றியது. வெயிலின் தாக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது.

சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்தில் துணியை மூடிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் சிலர் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் உஷ்ணத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று தெரியாமல் பொதுமக்கள் இப்போதே விழிபிதுங்குகின்றனர்.

இயற்கையின் ஆப்டிக்கல் இல்யூஷன் - வெப்பம் அதிகமான நாட்களில் சாலைகள் ஈரமாக தெரிவது ஏன்.?
 
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் என்பதே இயற்கையிடமிருந்து தான் தோன்றியிருக்கும் என்று கூறும் அளவுக்கு இன்றுவரை அதிசயத்தக்க காட்சியை நாம் பலமுறை கண்டுள்ளோம்.

கானல் நீர்
கடந்த சில நாட்களாக ஆப்டிகல் இல்யூசன் மிகப்பெரிய ட்ரெண்ட் ஆகி இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. ஒரு புகைப்படத்தில் எத்தனை படங்கள் மறைந்திருக்கிறது அல்லது எத்தனை முகங்கள் மறைந்திருக்கின்றன, புகைப்படத்தில் தெரிவது ஆண் அல்லது பெண்ணின் முகமா என்று நம்முடைய சிந்தனையைத் தூண்டும் பலவகையான ஆப்டிகல் இல்யூஷன் இமேஜஸ் உள்ளன. பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் நம்முடைய ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளவும், குணங்களைப் புரிந்து கொள்ளவும், எப்படி நாம் முடிவெடுப்போம் என்பதை பற்றி அறிந்து கொள்ளவும் என்று பல விதங்களில் ஆப்டிகல் இமேஜ் உதவுகிறது.

ஆப்டிகல் இமேஜ் என்பது செயற்கையாக கலைஞர்களால் புகைப்படம் வழியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் ஓவியர்களின் திறமையும், டிசைனர்களின் கிரியேட்டிவிட்டியும் வெளிப்படுகிறது. எப்படி இதை உருவாக்கினார்கள், என்னென்ன முகங்கள் உள்ளன என்று நாம் தான் மண்டையைப் பிடித்துக் கொள்கிறோம். ஆனால் அதே கலைஞர்களால், மனிதர்களால் மட்டும் தான் நாட்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை உருவாக்க முடியுமா என்ன? இயற்கையால் கூட முடியும்!

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் என்பதே இயற்கையிடமிருந்து தான் தோன்றியிருக்கும் என்று கூறும் அளவுக்கு இன்றுவரை அதிசயத்தக்க காட்சியை நாம் பலமுறை கண்டுள்ளோம்.

கானல் நீர் என்று கேள்விபட்டிருப்பீர்கள்! அதாவது இருக்கு ஆனா இல்ல என்ற ரீதியில் நாம் நிற்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் தண்ணீர் இருப்பது போலத் தோன்றும். கொளுத்தும் வெயிலில், தார்ச்சாலையில், சாலையின் நடுவே தண்ணீர் இருப்பது போல தோன்றும். அது தான் கானல் நீர். அதாவது நம் கண்களுக்கு தண்ணீர் இருப்பது போல தோன்றும், ஆனால் அங்கே தண்ணீர் இருக்காது.

அதிலும் குறிப்பாக, அதிக வெப்பம் இருக்கும் நாட்களில், கண்களுக்கு எட்டும் தூரத்தில் கானல் நீர் தோன்றும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணத்தை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

வெப்பம் அதிகமுள்ள நாட்களில், சாலையின் மேலே உள்ள காற்றும் அதிக சூடாகும். இதனால், காற்றின் அடர்த்தி குறையும். காற்றின் லேயர் அடர்த்தியாகவும், சாலைக்கு சற்று மேலே இருக்கும் காற்றின் லேயர் அடர்த்தி குறைந்தும் இருப்பதும், இன்வர்ஷன் லேயர் என்று கூறப்படுகிறது. இதனால், விண்ணிலிருந்து வரும் ஒளி கற்றைகள் நேரடியாக சாலையை அடைந்து மேற்புறமாக வெளிப்படுவதற்கு மாறாக, இல்யூஷனை உருவாக்குகிறது. அந்த ஒளி கற்றைகள், சாலையில் சிறிய நீர் தேக்கம் இருப்பது போல ஒரு ரிஃப்ளக்ஷனை ஏற்படுத்துகிறது.

தார் சாலைகளில் மட்டுமல்லாமல், பாலைவனங்களிலும், மண் ரோடுகளிலுமே அதிக வெயில் இருக்கும் நாட்களில் நீர்த்தேக்கம் அதாவது கானல் நீர் தெரியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments