கோபாலப்பட்டிணத்தில் வாட்டி வதைக்கும் வெயில்! நிழல் தேடி ஒதுங்கும் கால்நடைகள்!!



வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்களை மட்டுமின்றி கால்நடைகளையும் பதம் பார்க்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க கால்நடைகள் நிழலை தேடி ஒதுங்குகிறது. இந்தாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் சூரியனின் வெப்பக் கதிர்கள் காலை முதலே, அனலை உமிழ்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அனல் காற்று வீசுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மாதம் முதலில் இருந்தே வெயில் வாட்ட துவங்கியது. ஏற்கனவே வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. கோபாலப்பட்டிணம் பகுதியில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதை வீட்டில் கட்டி வைக்காமல் வெளியே அனுப்பி விடுகின்றனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாடுகள் மரங்கள் மற்றும் வீடுகளில் உள்ள நிழல் பகுதியைத் தேடிச் சென்றன.

இதன் மூலம் நாம் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. மரம் வளர்த்தால் வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து நிழல், சுத்தமான காற்று மற்றும் மழையை பெற முடியும். எனவே ஊர் முழுவதும் மரங்களை வளர்க்கவும் மற்றும் இருக்கும் மரங்களை பாதுகாக்க பொதுநல இளைஞர்கள் முன் வர வேண்டும்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments