கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி!


கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டாக நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் 2023-ஆம் ஆண்டு பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நேற்று 19.04.2023 புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் ரஹ்மானியா பெண்கள் மதராசா, நூருல் அய்ன் வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அல்ஹாஃபிழ் R.ஷாகுல் ஹமீது குத்ஸி அவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்நிகழ்வில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பெண்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்காக பொருளாதார உதவி மற்றும் உடல் உழைப்பு செய்த அனைவருக்கும் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல்:  உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கோபாலப்பட்டிணம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments