அறந்தாங்கியில் மஜக சார்பில் வீடு தேடி ஃபித்ரா வினியோகம்!அறந்தாங்கியில் மஜக சார்பில் வீடு தேடி ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா அரிசி ஏழைகளின் வீடு தேடி வழங்கப்பட்டது.

ரம்ஜான் மாத இறுதியில் ஏழைகளுக்கு வழங்கப்படும் ஃபித்ராவை மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டாக வசூல் செய்து ஏழைகள் வீடு தேடி வினியோகம் செய்யும் சேவையை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.இவ்வமைப்பினர் இந்த வருடமும் கூட்டாக வசூல் செய்து ஏழைகளுக்கு வினியோகம் செய்தனர். 

இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர் நோக்கியா சாகுல் அனைவரையும் வரவேற்றார். மருத்துவசேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் கனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி மற்றும் மாநில அமைப்பு சட்டம் ஒழுங்கு உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான முனைவர் முபாரக் அலி ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான 5 கிலோ ஃபித்ரா அரிசி கொண்ட பைகளை வழங்கி துவங்கி வைத்தனர். அதன் பின்னர் ஏனைய நிர்வாகிகள் ஏழைகளின் வீடுகளை தேடி சென்று வழங்கினார்கள். கிரசன்ட் பள்ளி தாளாளர் அசாருதீன் வாழ்த்துரை வழங்கினார். பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments