சென்னை எழும்பூர் ‌- செங்கோட்டை சிலம்பு SF எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டைக்கு வரும் நேரம் மாற்றம்!


சென்னை எழும்பூர் ‌- செங்கோட்டை சிலம்பு SF  எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டைக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது 

வரும் 19/04/23 முதல் வண்டி எண் -20681/ சென்னை எக்மோர் - செங்கோட்டை சிலம்பு SF ரயில் நேரம் மாற்றப்படுகிறது.

புதுக்கோட்டைக்கு இந்த ரயில் இனி இரவு 02:33 மணிக்கு வந்து 02:35 மணிக்கு புறப்படும். இது பழைய நேரத்தை விட 12 நிமிடங்கள் முன்னரே புதுகை ரயில் நிலையம் வந்து புறப்படுகிறது.

பழைய நேரம் : புதுக்கோட்டைக்கு இரவு 02:45 மணிக்கு வந்து 02:47 மணிக்கு புறப்பட்டு கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு : தற்போது இந்த ரயிலுக்கு எலக்ட்ரிக் லோக்கோ மாற்றம் விருதுநகரில் நடைபெறுவதால் இந்த நேர மாற்ற நடைமுறைக்கு வந்துள்ளது.  முன்பு எலக்ட்ரிக் லோக்கோ திருச்சியில் மாற்றம் நடைபெற்றது 
 
செங்கோட்டை வரை மின்சார லோக்கோ வில் இயக்க   அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த ரயில் இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments