கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!2023-ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு வெளியான நிலையில், மதியம் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு இந்த ஆண்டு 52 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 43 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 83 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. 

அஸ்வானா பர்வீன் என்ற மாணவி 471/600 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், யசோதாமாரி என்ற மாணவி 463/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், ரம்யா என்ற மாணவி 436/600 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.  

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி அதில் 83% சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வரக்கூடிய கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

முதல் மதிப்பெண் அஸ்வானா பர்வீன் 471

இரண்டாவது மதிப்பெண் யசோதாமாரி 463

மூன்றாவது மதிப்பெண் ரம்யா 436

மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments