கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!



தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 9.7லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது. முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு இந்த ஆண்டு 76 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 62 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 81.57 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. 

அரபியா பேகம் என்ற மாணவி 434/500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நூர் நிஷா என்ற மாணவி 419/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், பாரதி கண்ணா என்ற மாணவர் 417/500 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.  

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி அதில் 81.57 % சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வரக்கூடிய கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

முதல் மதிப்பெண் அரபியா பேகம் 434
இரண்டாவது மதிப்பெண் நூர் நிஷா 419

மூன்றாவது மதிப்பெண் பாரதி கண்ணா 417
மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments