புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்!தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஆட்சியர் கவிதா ராமு இ.ஆ.ப இடமாற்றம் செய்யபட்டு புதிதாக மெர்சி ரம்யா இ. ஆ.ப நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தர்மராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராகுல்நாத்திற்கு பதிலாக கமல்கிஷோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வணிகவரித்துறையில் நிர்வாகம் சார்ந்த இணை இயக்குநராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குநராக இருந்த விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக அன்னி மேரி ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராஜகோபால் சுங்காரா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குநர் சரயு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நில அளவை பதிவுத்துறை கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments