புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு சிஎம்டிஏ அதிகாரியாக நியமனம்.! 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முழு விபரம்!!தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு சி.எம்.டி.ஏ தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக கடலூர் ஆட்சியராக இருந்த பாலசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் 32 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு விவரம் வருமாறு:

*புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (CMDA) தலைமை செயல் அதிகாரியாக நியமனம். 
*தொழில்நுட்ப கல்வி இயக்குநராக வினய் நியமனம். 
*திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நியமனம். 
*மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், எல்காட் (ELCOT) நிர்வாக இயக்குநராக நியமனம்.
*நகர்ப்புற வளர்ச்ச்சி மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக சங்கர் நியமனம். 
*இல்லம் தேடிக்கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத், பாடநூல் மற்றும் கல்வி கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம். 
*தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநராக அண்ணாதுரை நியமனம். 
*சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சர்வே மற்றும் குடியேற்றத்தின் இயக்குநராக நியமனம். 
*தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக கோவிந்த ராவ் நியமனம். 
*திருப்பூர் ஆட்சியர் வினீத், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட இயக்குநராக நியமனம். 
*டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண் ஆணையராக நியமனம். 
*தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கூட்டுறவு சங்க பதிவாளராக நியமனம்.
*தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை தலைவராக நியமனம். 
*மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன், கைத்தறித்துறை ஆணையராக நியமனம். 
*ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக அர்சனா பட்நாயக் நியமனம். 
*சுகாதாரத்துறை சிறப்பு செயலாளராக ரீதா ஹரிஷ் தக்கார் நியமனம்.
*அருங்காட்சியங்கள் ஆணையராக சுகந்தி நியமனம். 
*நிதித்துறை இணை செயலாளராக ஹரிஷ்னனுன்னி நியமனம். 
*அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு இ-நிர்வாக முகமையின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம். 
*வணிகவரித்துறை நிர்வாக கூடுதல் ஆணையராக சுப்புலட்சுமி நியமனம். 
*மாநில தேர்தல் ஆணையராக கடலூர் ஆட்சியராக இருந்த பாலசுப்பிரமணியம் நியமனம். 
*பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராக சண்முக சுந்தரம் நியமனம். 
*காஞ்சி ஆட்சியர் ஆர்த்தி, அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் (SSA) இயக்குநராக நியமனம். 
*உள்துறை கூடுதல் செயலாளராக கஜலட்சுமி நியமனம்.
*நாமக்கல் ஆட்சியர் ஷ்ரேயா சிங், வேளாண் துறை கூடுதல் இயக்குநராக நியமனம். 
*உணவு, கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளராக ராஷ்மி சித்தார்த் ஸகடே நியமனம். 
*வேளாண் கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரியாக சிவனருள் நியமனம். 
*வேளாண் உழவர் நல சிறப்பு செயலாளராக நந்தகோபால் நியமனம். 
*வணிகவரித்துறை இணை ஆணையராக லக்‌ஷ்மி பாவ்யா தன்னீரு நியமனம். 
*இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக சங்கர் நியமனம். 
*மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம். 
*தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக கடலூர் ஆட்சியராக இருந்த பாலசுப்பிரமணியம் நியமனம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments