இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் - 2023 உடனே விண்ணப்பிக்க அழைப்பு!இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் உயர் கல்வி உதவித் திட்டம் - 2023 விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாகிய திட்டத்தின் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி எம்.பி உயர் கல்வி உதவித் திட்டம் - 2023 விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு விடுத்துள்ளார்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கிய சட்டமன்ற தொகுதிகள் 

* இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி - (இராமநாதபுரம் மாவட்டம்)

* பரமக்குடி சட்டமன்ற தொகுதி - (இராமநாதபுரம் மாவட்டம்)

* முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி - (இராமநாதபுரம் மாவட்டம்)

* திருவாடானை சட்டமன்ற தொகுதி - (இராமநாதபுரம் மாவட்டம்)

* அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி -
(புதுக்கோட்டை மாவட்டம்)

* திருச்சுழி சட்டமன்ற தொகுதி - (விருதுநகர் மாவட்டம்)

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்:

 1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 700 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.
 2. விண்ணப்பங்கள்யாவும் வரும் ஜூன் 30-2023 (30/06/2023)-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
 3. வரும் ஜூன் 30 (30-06-2023) க்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
 4. தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் கல்வி உதவியானது நேரடியாக தேர்வு செய்யப்பட்ட கல்லூரிக்கே வழங்கப்படும்.
 5. கல்வி உதவியானது எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ கொடுக்கப்படமாட்டாது.
 6. மாணவர்கள் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து விட்டு கட்டணத்தை செலுத்துமாறு கேட்கக் கூடாது.
 7. மாணவர்கள் தங்களின் சுய விருப்பத்திற்கேற்ப திட்டமிடுதலுடன் கல்லூரியையும், படிக்கும் துறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 8. எம்பி அலுவலகம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
 9. மாணவர்கள் அளிக்கும் தகவல்கள் மற்றும் கள ஆய்வு மூலமாக மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 10. தகுதியுடைய மாணவர்கள் மற்றும் திறமையான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களுக்கு இடையில் எந்த பாகுபாடும் கட்டாயமாக பார்க்கப்பட மாட்டாது.
 11. இவ்வாண்டு + 2 முடித்த மாணவர்கள் அல்லது ஏற்கனவே இத்திட்டத்தில் கல்வி உதவி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 12. கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வண்ணம், கட்டணம் செலுத்த வசதி படைத்த மாணவர்கள் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments