சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நான்கு வழி கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நாகை முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
பசுமை 4 வழிச்சாலை
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடியில் 312 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 90% பசுமை வழிச்சாலை என்பதால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. அதன்படி, இந்த பசுமை வழிச்சாலையில் 37 பெரிய பாலங்கள், 55 சிறிய பாலங்கள், 690 சிறிய கால்வாய் நீரோடை பாலங்கள் அமைய உள்ளன.
நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பசுமை வழிச்சாலையால் பெரியளவில் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே தயாரித்துள்ளது. மேலும் , தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல இந்த பாதை மாற்று வழியாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த மாதத்தில் பணிகள் தொடக்கம்
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதம் தொடர்பான அறிவிப்பை இந்த மாதத்தில் வெளியிட மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர் வெளியிடும் முன்னரே நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிற பணிகளை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், தேசிய நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களில் டெண்டர் விடப்பட்ட பின்னரும் நிலம் கையகப்படுத்தாமல் இருப்பதால், ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே தற்போது, சாலை அமைப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
5 கட்டங்களாக இந்த பசுமை வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 2 பணிகளுக்கு இந்த ஆண்டே டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்ததாரர்கள் பணியை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த பின்னர், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.