தமிழக அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள் – 60,000 பேர் விண்ணப்பம்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு விட்டதால் தற்போது வரைக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை:
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், இந்தாண்டு கண்டிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, தனியார் பள்ளிகளை போலவே மாணவர் சேர்க்கை முன்கூட்டியே துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டுமே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் தான் நடைபெறும்.

ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 17 ஆம் தேதியிலிருந்தே மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு விட்டது. இது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான பிரச்சாரமும் நடைபெற்றது. மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது வரைக்குமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக அரசு தொடக்க பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு சேருவதற்கு இது வரைக்கு 60,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தமிழக அரசு பள்ளிகள் மாணவர்களின் எதிர்கால நன்மைக்காக வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்களின் மூலமாக பெற்றோர்களின் கவனத்தை அரசு பள்ளிகள் அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments