புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
கிராம பகுதிகளில் தொடர்ச்சியாக சுகாதார மேம்பாடு, திட மற்றும் நிரவ கழிவு மேலாண்மை செய்வதை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தமிழ்நாடு அரசின் ஆணைப்படி, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப் புறங்கள், ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறன், பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கை தரத்திற்கு இன்றியமையாதது என்பதால் தற்போது ஊராட்சிகளில் சுகாதாரம், திட திரவ கழிவுகள் மேலாண்மை மற்றும் விழிப்பு ணர்வு முறையான வசதி இல்லாத கிராமங்களில் பொது சுகாதாரம்.

குழந்தை இறப்பு, சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதாரம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் ஒருங்கினைந்த தீர்வு காண்பதற்கு "நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு இயக்கம் 15.08.2022 அன்று கதந்திர தின திருநாளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு 20.08.2022 முதல் 02.10.2022 வரை 44 நாட்கள் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 01.05-2023 முதல்15.06.2023 வரை திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட "நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு இயக்கம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பொது இடங்களில் 01.05.2023 முதல் 13.05.2023 வரை மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளல். 08.05.2023 முதல் 13.05.2023 வரை மருத்துவ பரிசோதனை மற்றும் நலத் திட்டம். 08.05.2023 முதல் 13.05.2023 வரை தூய்மை மற்றும் பசுமை கிராமங்களை உருவாக்குதல், 15.05.2023 முதல் 27.05.2023 வரை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக வீடு தோறும் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுப் பொருட்களை கையாள்வது தொடர் பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

29.05.2023 முதல் 03.06.2023 வரை ஒரு முறை பயன் படுத்தும் நெகிழி பொருள்களுக்கு பதிலாக மாற்றுப் பொருள்கள் பயன்படுத்துதல், மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல். 05.06.2023 முதல் 15.06.2023 வரை பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுப் பொருள்களை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் "நம்ம ஊரு சூப்பரு" இயக்க நடவடிக்கைகளில் அனைத்து துறை அலுவலர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பொது மக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள், தன்னார்வலர்கள் முழுமையாக ஈடுபட்டு இவ்வியக்கத்தை வெற்றி பெறச் செய்திட அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுவிதா ராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments