கோட்டைப்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு
கோட்டைப்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக முகமது அசரப் அலி, செயலாளராக சாதிக் அலி, பொருளாளராக அகமது பாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக கோட்டைப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments