பயிர் வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை




பயிர் வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை பற்றாக்குறையால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மணமேல்குடி தாலுகாவில் சுமார் 1,800 எக்டேர் நிலம் பாதிக்கப்பட்டும் இதுவரையும் வறட்சி நிவாரணம் வழங்கவில்லை என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

கலைந்து சென்றனர்

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மே மாத இறுதிக்குள் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து முற்றுகையிட்ட விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments