மதுரை- தொண்டி இடையே ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சிவகங்கை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் புகார்




சிவகங்கை மாவட்டத்தை ரயில்வே நிர்வாகம். தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், மதுரை - தொண்டி இடையே ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட பல திட்டங்கள். ஆண்டுக்கணக்காக கிடப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த ரயில்வே பாதை சுமார் 90 கி.மீ அளவு மட்டுமே. மாவட்டத்தில் மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டது.
 
சிவகங்கையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு போட் மெயில் எக்ஸ்பிரஸ், 10.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சிலம்பு எக்ஸ்பிரஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. போட் மெயில் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்திலிருந்தும், சிலம்பு எக்ஸ் பிரஸ் செங்கோட்டையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது.

சிவகங்கையில் இருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு ரயில்கள் மட்டுமே சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். 

சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் ரயிலை மானாமதுரை வரை இயக்கவேண் டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார் கோவில், சருகணி, திருவாடானை வழி தொண்டிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுக்கணக் கில்கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர், மேலூர் வழி மதுரை செல்லும் ரயில் பாதை திட்டம் ஆய்வு செய்யபட்டு அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் உள்ளது. 

காரைக்குடி திருப்பத்தூர், சிங்கம்புணரி வழி திண்டுக்கல்,

காரைக்குடி. ராமநாதபுரம் வழி தூத்துக்குடி ரயில் பாதை திட்டங்கள் என ஏராளமான ரயில்வே திட்ட கோரிக்கைகள் இருந்தும் இவற்றில் ஒன்று கூட கண்டுகொள்ளப்படவில்லை சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக  சிவகங்கை வர்த்தக சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 

“மதுரை - தொண்டி ரயில் பாதை திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். பல்வேறு வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள இதுபோன்ற மிக அவசியமான திட்டங்களைக் கூட கிடப்பில் போட்டுள்ளனர். 

திட்டங்களுக்கான ஆய்வு, அல்லது பணிகள் தொடங்கிய நிலை என ஒவ்வொரு திட்டமும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை செல்ல தினந் தோறும் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லா நாட்களிலும் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. 

கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சிவகங்கை நிறுத்தத்திற்கு முன்னதாகவே ராமேஸ்வரம், ராமநாதபுரம் போன்ற ஊர்களிலேயே ஏராளமான பயணிகள் ஏறி விடுகின்றனர். 

இதனால் அவற்றில் நிற்க கூட இடம் கிடைப்ப சிவகங்கை மாவட்ட ரயில்வே திட் டங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments