10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெள்ளிக்கிழமை வெளியீடு!






 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெள்ளிக்கிழமை வெளியீடு!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:  காலை 10.00 மணிக்கு வெளியாகிறது

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் :  மதியம் 2.00  மணிக்கு வெளியாகிறது

தமிழ்நாட்டில் மார்ச்/ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2022-23-ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1)பொதுத் தேர்வுகள் மார்ச் ஏப்ரல் 2023 தேர்வு முடிவுகள் வெளியிடல்,செய்திக்குறிப்பு

மார்ச்/ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு

19.05.22023 காலை 10.00 மணிக்கு

மேல்நிலை முதலாமாண்டு (1) பிற்பகல் 2.00 மணிக்கு

இணையதள முகவரி:-



தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments