சுட்டெரிக்கும் கோடை வெயில் – தொழுகையாளிகளுக்கு லெமன் ஜூஸ் வழங்கிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடந்த காலங்களில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வந்திருக்கிறனர். தற்போது சங்க கட்டிடம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகம் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றி வருகின்றது.

இந்நிலையில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், இன்று கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளிக்கு ஜுமுஆ தொழுகைக்கு வந்த தொழுகையாளிகளுக்கு, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. இதன்படி இன்று சுமார் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது.

மேலும் வரக்கூடிய வாரங்களிலும் ஜுமுஆ தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளுக்கு ஜூஸ் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments