திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி இணைந்து நடத்தும் மாபெரும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி.!திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி இணைந்து நாளை 20/05/2023 மாபெரும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகின. மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்று மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி திஃ போர்ட் சிட்டி ரோட்டரி இணைந்து நடத்தும் அடுத்து என்ன படிக்கலாம் மாபெரும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை 20/05/2023 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் அறந்தாங்கி பொற்குடையார்கோவில் அருகில் உள்ள IMA ஹாலில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றும் என்ன படித்தால் எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற கேள்விகளுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள், ஆசிரியர், சட்டப் படிப்புகள், வேளாண்மை சார்ந்த படிப்புகள் மற்றும் கல்விக்கடன் பெறுவது குறித்து அனைத்து விதமான கேள்விகளுக்கும் துறை ரீதியான வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர். 

ஆகவே சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு அடுத்து என்ன படிக்கலாம் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

IMA அறந்தாங்கி கிளை, அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு தங்களை அன்புடன் அழைக்கிறது.

தொடர்புக்கு: 9715840380


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments