மீமிசல் சுற்றுவட்டாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவி முதலிடம்!




மீமிசல் சுற்றுவட்டாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சேக் வஸ்மியா என்ற மாணவி  முதலிடத்தை பிடித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் 9.7 லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தேர்வில் 13151 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 264 சிறைக்கைதிகளும் கலந்து கொண்டனர். இன்று 19.05.2023 காலை 10 மணியளவில் முடிவுகள் வெளியாகின. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி  ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது அவர்களின் பேத்தியும் அபுபக்கர் சித்திக் அவர்களின் மகளுமாகிய சேக் வஸ்மியா என்ற மாணவி 488/500 எடுத்து மீமிசல் சுற்றுவட்டாரத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.  இவர் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், பல சாதனைகளை படைத்திட GPM மீடியா குழு சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments