அறந்தாங்கியில் திருமணமான 6 வருடத்தில் இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல்
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திருமணமான 6 வருடத்தில் இறந்த பெண்ணின் உறவினர்கள் மாமியார், கணவரின் தம்பி ஆகியோரை கைது செய்யக்கோரி  சாலைமறியல் செய்தனர்.

அறந்தாங்கி தாலுகா செங்கமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி மகாலட்சுமி இருவருக்கும் திருமணம் நடந்து  6 ஆண்டுகள் ஆகி நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில்  வீட்டில் பூச்சி மருந்து அருந்திய
மகாலட்சுமி  ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்  உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மகாலட்சுமியின் உறவினர்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உறவினர்கள் கூறுகையில் திருமணம் ஆகி 6 வருடங்களாக தொடர்ந்து  கணவர் வீட்டில் மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் சேர்ந்து தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் மகாலட்சுமி ஏற்கனவே கூறியுள்ளார். இதுகுறித்து பெண் வீட்டார் பலமுறை கணவர் வீட்டாரோடு சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் மகாலட்சுமி இறந்துள்ளார். இதில் எங்களுக்கு பலத்த சந்தேகம் உள்ளது. விசம் அருந்தி தற்கொலை செய்துக்கொள்ளும் மகாலட்சுமி கோழை இல்லை, எனவே மாமியார் மற்றும் கணவரின் தம்பி ஆகியோரை கைது செய்து விசாரித்து தக்க நியாயம் வழங்க வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ கவரேஜ் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அறந்தாங்கி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை எதிரில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments