அறந்தாங்கியில் கூடைபந்து வீரர்களுக்கு வணிகர் பேரவை சார்பில் ஊட்டசத்துணவு வழங்கல்!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூடைபந்து வீரர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை  ஊட்டசத்துணவு வழங்கியது.

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இயங்கி வரும் பைட்டிங் ஸ்டார்ஸ் கூடை பந்து கழகம் பல ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கூடை பந்து பயிற்சி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பேட்ஜிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 

இவ்வாறு பயிற்சி பெற்றுவரும் கூடைபந்து வீரர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஊட்டசத்துணவு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் தலைமையில் கூடைபந்து பயிற்சியாளர் விஜி முன்னிலையில் மாவட்ட இணை செயலாளர் முனைவர் முபாரக் அலி அனைவரையும் வரவேற்றார்.

ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் வி.பொன் துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊட்டசத்துணவு வழங்கி மாணவ மணவிகளான வீரர்களை வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் வினாயக செந்தில்வேல், வி.முத்துகாமாச்சி, துணை செயலாளர் வெங்கட், சட்ட ஆலோசகர் மணிமாறன், மூத்த உறுப்பினர் நாகராஜன், மாவட் இளைஞர் அணி செயலாளர் அசோக், துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், அப்துல் நாசர், முத்துகிருஷ்ணன், குணாலன்
நகர துணை செயலாளர்கள் ரபிக், சேக் நத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் மாவட்ட பொதுச்செயலாளர் மலையப்பன் அனைவருக்கும்  நன்றி கூறினார்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments