புதுக்கோட்டை அரசு பஸ்சில் தவறவிட்ட 20 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்..
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள திருமலைராயபுரத்தை சேர்ந்தவர் கிளைட்டன் (வயது 33). சென்னையில் வசித்துவரும் இவர் சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை கீரனூரில் கிளைட்டன் இறங்கியுள்ளார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகையை தவற விட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் இது தொடர்பாக புதுக்கோட்டை பணிமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கண்டக்டர் ஜோசப் பால்ராஜ் என்பவர் 20 பவுன் நகையை எடுத்து அரசு பணிமனை அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

 பின்னர் நகர போலீஸ் நிலையத்திற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் கண்டக்டர் ஆகியோர் நேரில் வந்து நகையை ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து கிளைட்டனிடம் நகையை ஒப்படைத்தனர். பின்னர் நகையை மீட்டு கொடுத்த அரசு பஸ் கண்டக்டருக்கு, கிளைட்டன் நன்றி தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments