மல்லிப்பட்டிணம் சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
மல்லிப்பட்டிணம் சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அப்போது, அங்கிருந்த அதிகாரிகளிடம் நடைபெற்று வரும் பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார். பின்னர், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபாவாசத்திரம் ராஜமாணிக்கம் மற்றும் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.  

அப்போது, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் வீ. பிரபாகர், மீன்பிடி துறைமுக திட்டக் கோட்டம் (நாகப்பட்டினம்) இணை இயக்குநர் இளம்வழுதி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு. கி. முத்துமாணிக்கம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments