புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர எக்ஸ்பிரஸ் இரயில் 7 மணி நேரம் தாமதமாக புதுச்சேரியில் இருந்து புறப்படும்





இணை ரயில் தாமதத்தின் காரணமாக இன்று (28/05/23) ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படவேண்டிய 16861/ புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர ரயில் புதுச்சேரியிலிருந்து 07:00 மணிநேரம் தாமதமாக இரவு 07:00 மணிக்கு புறப்படும்  என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு. 

மேலும் இந்த ரயில் புதுக்கோட்டைக்கு இன்று (28-05-2023) மாலை 06:23 வந்து 06:25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இன்று  (28-05-2023)
இரவு 11:57 மணிக்கு வந்து 11:58 மணிக்கு புறப்படும் என்றும் எதர்ப்பார்க்கபடுகிறது, 

தொடர்ந்து இந்த ரயில் திருநெல்வேலிக்கு நாளை  (29-05-2023)
காலை 04:44 மணிக்கும், நாகர்கோவில்க்கு காலை 05:24 மணிக்கும், கன்னியாகுமரிக்கு நாளை காலை 06:03 மணிக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில் தாமதம், இன்று (மே 28) இரவு புதுக்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் ரயிலில் செல்ல ஒரு வாய்ப்பு!

இன்று 16861/புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில் தாமதத்தினால் இந்த ரயில் புதுக்கோட்டையிலிருந்து இன்று ஞாயிறு இரவு 11:58 மணிக்கு புறப்படும் என்றுள்ளது. மேலும் இந்த ரயில் திருநெல்வேலிக்கு காலை 04:44 மணிக்கு செல்லும் என்று நேரம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் க்கு காலை 05:00 மணிக்கும், பிறகு காலை 07:25 மணிக்கு இரயில் சேவைகள் உள்ளதால் இந்த இணைப்பை பயன்படுத்தி புதுக்கோட்டையிலிருந்து திருச்செந்தூர்க்கு இணைப்பு ரயிலில் செல்லலாம்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே நேரடியாக திருச்செந்தூர் செல்ல முன்பதிவில்லா எடுத்துக்கொள்ளலாம்.  புதுக்கோட்டை - திருச்செந்தூர் UR
கட்டணம் - ₹130/ மட்டுமே.

புதுச்சேரி - கன்னியாகுமரி ரயிலில் திருநெல்வேலி வரை பயணிக்க 5 முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளதால் புதுக்கோட்டை பயன்படுத்திக்கொள்ளவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments