கோட்டைப்பட்டினத்தில் சென்ட்ரல் வங்கியின் ATM மையம் திறப்பு!கோட்டைப்பட்டினத்தில் சென்ட்ரல் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் ECR ரோடு 102 காம்ப்ளக்சில் அம்மாப்பட்டிணம் சென்ட்ரல் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ATM-மையத்தை நேற்று 20/05/2023 சனிக்கிழமை மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான S.M.சீனியார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. SRM.அஹமது தம்பி, கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு.அக்பர் அலி, வர்த்தக சங்க நிர்வாகிகள், வங்கி அலுவலர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments