படிப்பதற்கு வயது முக்கியமில்லை பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோபாலப்பட்டிணம் சிங்கபெண்...




படிப்பதற்கு வயது முக்கியமில்லை பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோபாலப்பட்டிணம் சிங்கபெண்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் MP. சிராஜூதீன் என்பவரின் மகளும் முகமது அப்துல்லாஹ் என்பவரின் மனைவியுமான ஜொகுர் பேகம் என்கின்ற 38 வயதுடைய பெண்மணி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வராக தேர்வு எழுதி 294 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனது திருமண வாழ்விற்கு பிறகும் 38 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதி பூண்டு அதற்காக சீரிய முயற்சி செய்து அதிலும் வெற்றி அடைந்த ஜொகுர் பேகம் படிப்பதற்கு வயது முக்கியமில்லை  என்பதற்கு முன் உதாரணமாக விளக்குகிறார்.

தனது 38 வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டிய ஜொகுர் பேகம் அவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று ஊக்கப்படுத்திய அவரது கணவர் மற்றும் குடும்பத்தார்களுக்கும் GPM மீடியா அட்மீன் குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரலாற்றில் பெண்கள் பல்வேறு பெரும் சாதனைகள்  நிகழ்த்திருக்கிறார்கள் அந்த வரிசையில் கோபாலபட்டினத்திலும் நீங்கள் சாதனை படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் GPM மீடியா சார்பாக மனதாரப் பாராட்டுகிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments