ஆவுடையார்கோவிலில் நீதிமன்றம் கட்டுவதற்கான புதிய இடத்தை நீதிபதிகள் ஆய்வு..


ஆவுடையார்கோவிலில் நீதிமன்றம் கட்டுவதற்கான புதிய இடத்தை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் புதிதாக நீதிமன்றம் அமைப்பதற்காக மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரெத்னா மற்றும் சிறப்பு நீதிமன்றம் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் என்.டி.பி.எஸ். நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால் ஆகியோர் ஆவுடையார்கோவில் பழைய தாசில்தார் அலுவலகத்தை ஆய்வு செய்தனர். 

பின்னர் ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அருகில் உள்ள ஓர் கட்டிடத்தையும், ஆவுடையார் கோவில் கால்நடை மருத்துவமனை அருகில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நீதிமன்றம் கட்டுவதற்காக இ்டத்தையும் நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments