கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் தரமற்று போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்! திட்ட இயக்குனருக்கு பறந்த புகார் மனு!! ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!!!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் தரமற்று போடப்பட்ட கால்வாய் குறித்து சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் சார்பில் திட்ட இயக்குனருக்கு புகார் மனு அளித்ததின் காரணமாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் சில மாதங்களுக்கு முன் MGNREGS (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்) கீழ் சுமார் 7.52 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் போடப்பட்டது.

இந்நிலையில் அவுலியா நகரில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் தரமற்ற நிலையில் இருந்ததை கண்ட சமூக ஆர்வலர் முகமது ரியாஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் உதவி செயற்பொறியாளர் மற்றும் உடைந்தையாக இருந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்ஆப்பில் 17/05/202 அன்று புகார் மனு அனுப்பி இருந்தார்.

இதையடுத்து தரமற்று போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் 18/05/2023 அன்று ஆய்வு செய்தனர். ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற நிலையில் கழிவுநீர் கால்வாய் போடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து விரைவில் சரி செய்து தரப்படும் என்றும் கழிவுநீர் கடலுக்கு செல்ல ஒன்றரை மாதத்திற்கு பிறகு வழி ஏற்படுத்தபடும் என்றும் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் தெரிவித்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments