கீழக்கரை, பனைக்குளத்தில் உயர் கோபுர மின் விளக்கு சேவையை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி MP துவக்கி வைத்தார்இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, பனைக்குளத்தில் உயர் கோபுர மின் விளக்கு சேவையை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி MP  துவங்கி வைத்தார்.

கீழக்கரை 

   
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க 4 உயர்மின் கோபுர விளக்குகள் தொகுதி மேம்பாட்டு நிதியில் மூலம் 21 மீனவர் குப்பம், வடக்கு தெரு, சொக்கநாதர் கோயில் மற்றும் முஸ்லிம் பஜார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு  மக்களின் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்ற தலைவி செகனாஸ் ஆபிதா, நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், திமுக கீழக்கரை நகர் செயலாளர் பஷீர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் திரு வேலுச்சாமி, கீழக்கரை நகராட்சி ஆணையர், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாவட்ட செயலாளர் முகமது பைசல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பனைக்குளம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம் பனைக்குளம்  பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் பாராளு மன்ற உறுப்பினர் நிதி யில் ஹைமாஸ் விளக்கை நவாஸ் கனி எம்பி துவங்கி வைத்தார்.

பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவி பெளசியா பானு, பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை செயலாளர் முஹமது ரோஸ் சுல்தான், நிர்வாக சபை தலைவர் ஹம்சத்அலி, செயலாளர் சாகுல் ஹமீது, மண்டபம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முத்துகுமார், கிளை செயலாளர் ஜஹாங்கிர் அலி மாவட்ட பிரதிநிதி நூருல் மன்னான், முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி முஹமது இக்பால் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் திமுக கிளை நிர்வாகி சீனி அன்வர் அலி நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments