குளுகுளு குளிர்...! ஊட்டியாக மாறிய கோபாலப்பட்டடிணம், மீமிசல் பகுதி




 



கோபாலப்பட்டடிணம், மீமிசல் பகுதி குளுகுளு குளிர் ஊட்டியாக மாறியது 

தமிழகம் முழுவதும் சுட்டெரித்த கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது 

தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெப்பம் தகிக்கத் தொடங்கியது. அதுவும் இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திர காலம் துவங்க உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று எண்ணிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் கடந்த சில மூன்று நாட்களாக இரவில்   மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

இன்று மே 02 செவ்வாய்க்கிழமை காலை முதல்  அவ்வப்போது லேசான சாரல் மழையுடன் குளிர் நிலவி வருகிறது. இதனால், கோபாலப்பட்டிணம் முழுவதும் காலை முதல் ஊட்டி போல் குளுகுளுவென குளிர்ந்த நிலையில் உள்ளது. 

குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

லேசான தூறல்

மிதமான காற்று

குறைவான வெளிச்சம்

நடுக்கம் இல்லாத குளிர்

சூரியன் வெளிவராத வானம்














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments