புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு.!



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா இன்று 22.05.2023 திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா. மெர்சி ரம்யா திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




2015ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி முடித்த மெர்சி ரம்யா, ஈரோடு, விழுப்புரம், குமரி மாவட்டங்களில் உதவி மற்றும் துணை ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வணிகவரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றிய, மெர்சி ரம்யா தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களுக்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள்.. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments