சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (01-06-2023) முதல் வாரம் மும்முறை இயக்கம்








திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்படும்  என   தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது 



திருவாரூர் - காரைக்குடி வழித்தடம் 

திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பேராவூரணி பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால்  பயண நேரம் பாதியாக குறைந்தது 

இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான தலைநகர் சென்னைக்கு தினசரி நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது கோரிக்கை இருந்து வந்தது .

இந்நிலையில் தற்போது தலைநகர் சென்னையில் இருந்து திருவாரூர் காரைக்குடி பாதை இனைக்கும் வகையில் வாரத்தில் மூன்று நாட்கள்  சென்னை தாம்பரம் - செங்கோட்டை  SF எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் திருவாரூர் காரைக்குடி பாதையில் உள்ள திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக  இந்த இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் இன்று ஜூன் 01  தேதி முதல் வாரம் மும்முறை இயக்கப்படுகிறது.

ஏற்கனவே தலைநகர் சென்னையில் இருந்து திருவாரூர் காரைக்குடி பாதை இனைக்கும் வகையில்  வாரத்தில் ஒரு நாட்கள் மட்டும் 
9 மாதம் காலமாக  செகந்திராபாத் - இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) வாரந்திர ரயில் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக  இந்த இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது குறிப்படத்தக்கது.

வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 

ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 

மறுநாள்   திங்கள் புதன் வெள்ளி  கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

திருவாரூர் டு காரைக்குடி  ஊர்களின் அட்டவணைகள்

திருவாரூர் (01.50 AM), 
திருத்துறைப்பூண்டி(02.29AM), முத்துப்பேட்டை (02.58 AM),
பட்டுக்கோட்டை (03.26 AM), 
அறந்தாங்கி (04.10 AM), 
காரைக்குடி (04.58 AM)

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் 

திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 

மறுநாள்   செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்

காரைக்குடி டு திருவாரூர்  ஊர்களின் அட்டவணைகள் 

காரைக்குடி (09.33 PM), 
அறந்தாங்கி (09.57 PM), 
பட்டுக்கோட்டை (10.43‌ PM), 
முத்துப்பேட்டை(11.09PM),  திருத்துறைப்பூண்டி  (11.37 PM),
திருவாரூர் (12.15 AM),

எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு 
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை 
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு 
அருப்புக்கோட்டை
விருதுநகர் சந்திப்பு 
திருநெல்வேலி சந்திப்பு 
சேரன்மகாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம் 
தென்காசி சந்திப்பு 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெருவிக்கப்பட்டுள்ளது

குறிப்பு: ஏற்கனவே வாரம் மும்முறை ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள் 

முதன்மை பராமரிப்பு : தாம்பரம்
OEA: செங்கோட்டை

All the coaches will be LHB coaches. Coach composition

Second Class Sleeper - 5 coaches
Third AC Economy- 5 coaches 
Second AC - 2 coaches 
Unreserved Second Class - 5 coaches
TOTAL- 17 coaches

LWSCN-5, LWACCNE-5, LWACCW-2. LS-3, LWRRM-2 17 பெட்டிகள்

லோலா:

TBM-TVR:   தாம்பரம் முதல் திருவாரூர் வரை எலக்ட்ரிக் லோகாவில் இயக்கப்படும்

TVR-SCT: திருவாரூர் முதல் செங்கோட்டை வரை டீசல் லோகாவில் இயக்கப்படும்

இந்த ரயிலின் அதிர்வெண் 01.06.2023 முதல் தாம்பரம் 02.06.2023 முதல் செங்கோட்டை வாரந்தோறும் மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும். 

அதன்பிறகு செயல்படும் நாட்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாட்கள்: 

ஞாயிறு, செவ்வாய், வியாழன் 

செங்கோட்டையில் இருந்து புறப்படும் நாட்கள்: 

திங்கள், புதன், வெள்ளி

இது குறித்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த TIDIRUC உறுப்பினர் 
ஆலத்தம்பாடி வெங்கடேசன் அவர்கள் கூறுகையில்

இன்று 01-06-2023 (வியாழக்கிழமை) முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மட்டும் திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை  அறந்தாங்கி  நகரங்களுக்கு செல்வதற்கு சென்னையில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் நேரடி ரயில் சேவைகள் உள்ளன 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நமது பகுதி மக்கள் ஊர் வருவதற்கு  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9-45 மணிக்கு வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவையும் இரவு 9-00 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வண்டி எண் 20683 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையும் உள்ளது.

நாளை 02-06-2023 (வெள்ளிக்கிழமை) முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காரைக்குடி - திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள‌ அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி  நகரங்களில் இருந்து  சென்னை செல்வதற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் நேரடி ரயில் சேவைகள் உள்ளன.

நமது பகுதி மக்கள்   சென்னை செல்வதற்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் நேரத்தில் வண்டி எண் 07696 செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இரவு நேரத்தில் வண்டி எண் 20684 தாம்பரம் அதிவிரைவு ரயில் உள்ளது.

திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு நமது பகுதி வழியாக இயங்கிடும் ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

PC Credit: Pattukottai Rail Users .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments