இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாணவர்களுக்கான மாபெரும் கல்விக்கடன் முகாம்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  கே நவாஸ்கனி எம்பி ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாணவர்களுக்கான மாபெரும் கல்விக்கடன் முகாம்.

மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற நவாஸ்கனி எம்பி அழைப்பு.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களுக்கான மாபெரும் வங்கி கல்விக்கடன் முகாம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒருங்கிணைப்பில்  இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெற உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட  மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார்.

 இந்த மாபெரும் வங்கி கடன் முகாமில் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றனர்.

 இது தொடர்பான விபரங்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மாணவர்கள் அனுகி விபரங்களை கேட்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சூழல் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்கள்  உரிய ஆவணங்களுடன் பங்கேற்று கல்வி கடன் பெற்று பயன்பெறலாம்.

ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  மாணவர்களுக்கு ஆண்டுதோறும்700 மாணவர்களுக்கான உயர் கல்விக்கான உதவியை தன்னுடைய சொந்த நிதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் வழங்கி வரும் நிலையில், அது அல்லாது மற்ற மாணவர்கள்  பயன்பெறும் வகையில், வங்கிகளில் கல்வி கடன் பெற்று பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர்களின்  சிரமத்தை  இலகுவாக்கும் வகையில் இந்த மாபெரும் கல்வி கடன் முகாமினை இராமநாதபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார்.

17 வங்கிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒரே இடத்தில் ஒன்று கூடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து, ஆவணங்களை சரி பார்த்து, விரைந்து கல்விக்கடன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம்  நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பொருளாதார தடையால் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கக் கூடாது,   வங்கிகளின் மூலம் கல்வி கடன் பெற்று உயர் கல்வியை தொடர விரும்பும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர் கல்வியை தொடர, பயனுள்ள வகையில் பங்கேற்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments