புதுக்கோட்டை - சேலம் - புதுக்கோட்டை இணைப்பு ரயில் அட்டவணை!புதுக்கோட்டை-சேலம்-புதுக்கோட்டை இணைப்பு ரயில் வழி குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம். இந்த இணைப்பு ரயில் திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்கள் கிடைக்கும். 

இரண்டு ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்க எதாவது ஒரு ரயில் நிலையத்தில் நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொண்டால் போதுமானது. மீண்டும் எங்கும் இறங்கி டிக்கெட் பெற தேவையில்லை. திருச்சியில் இறங்கி ரயில் மட்டும் மாற்றிக்கொள்ளவேண்டும்.

உதாரணம் நீங்கள் புதுக்கோட்டையிலிருந்து சேலம் பயணிக்க விரும்புகிறீர்கள் எனில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் சேலம் வழி கரூர்-நாமக்கல் என்று கேட்டு முன்பதிவில்லா விரைவு ரயில் டிக்கெட் பெற்றுக்கொள்ளவேண்டும். புதுக்கோட்டை-சேலம் -கட்டணம் ₹85/-, காலை 07:50 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து திருச்சி 09:10 மணிக்கு சென்று அங்கிருந்து காலை 09:45 மணிக்கு புறப்படும் திருச்சி-கரூர்-சேலம் டெமு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த ரயில் சேலம் மதியம் 01:50 மணிக்கு செல்லும். இதே நடைமுறை தான் திரும்பி புதுக்கோட்டை வருவதற்கும். சேலம் ரயில் நிலையத்தில் புதுக்கோட்டை என்று டிக்கெட் கேட்டு பெற்றுக்கொண்டு சேலத்திலிருந்து மதியம் 02:05 மணிக்கு புறப்படும் சேலம்-கரூர்-திருச்சி டெமு வில் பயணித்து மாலை 05:55 மணிக்கு வந்து திருச்சியில் இறங்கி 06125/திருச்சி-காரைக்குடி ரயிலில் மாலை 06:15 மணிக்கு புறப்படும் ரயிலில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு இரவு 07:08 மணிக்கு வந்து விடலாம்.

இதே நடைமுறை தான் இதே இணைப்பை பயன்படுத்தி புதுக்கோட்டையிலிருந்து குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம் அல்லது அட்டவணையில் உள்ள பகுதிகளுக்கு நேரடி முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்.

புதுக்கோட்டை வாசி வாரத்தில் ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் இந்த இணைப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்தி பயன்பெறுவீர்!

குறிப்பு: இரண்டு ரயில்களுக்கு தனி தனியாக டிக்கெட் எடுத்து பயணித்தீர்கள் எனில் மேற்கண்ட முறையில் நேரடியாக ஒரே டிக்கெட்டாக எடுப்பதை விட கூடுதலாக  ஒரு டிக்கெட்டுக்கு 20 ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments