மக்களின் மனம் கவர்ந்த மலைகளின் இளவரசி! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மே மாதம் மட்டும் 10 லட்சம் பேர் வருகை...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலங்களை மே மாதத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்டவர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் லட்சக்கணக்கான பயணிகள் வருவது வழக்கம். மே மாதம் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி கோடை விழா நடக்கும். இதைக் காணவும் ஏராளமான பயணிகள் இங்கு குவிவர். நடப்பாண்டில் மே 26 ல் மலர்க்கண்காட்சி துவங்கி 5 நாட்கள் நடந்தது. இக்கண்காட்சியை 65 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். எட்டு நாள் கோடை விழாவும் நடந்தது.

மே மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டதால் போக்குவரத்து நெரிசலால் நகரம் திக்குமுக்காடியது. மே 1 முதல் 31 வரை இங்குள்ள பிரையன்ட் பூங்கா கோக்கர்ஸ் வாக் படகுகுழாம் வன சுற்றுலா தலங்கள் மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களை 10 லட்சத்து 98 ஆயிரத்து 9 பேர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலா துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments