செங்கோட்டை - சென்னை தாம்பரம் SF எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக இனைப்பு ரயிலில் வட மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லலாம் வாங்க எப்படினு பார்போம்




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது 




வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும்  ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
 
தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு, 
திருப்பாதிரிப்புலியூர்
(கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு, 
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு, 
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு, 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது

இனைப்பு ரயில்கள் (Connection Train)

செங்கோட்டை  - தாம்பரம் 20684 வண்டியில் பயணிப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஊர்களுக்கு செல்ல இணைப்பு இரயில் உள்ளது. எனவே அவ்வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

வண்டி எண்: 20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்படும் 

மறுநாள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில்
 
விழுப்புரம் சந்திப்பில் இருக்கும் இனைப்பு ரயில்கள்




விழுப்புரம் இறங்கி மேல உள்ளே அட்டவணையில் உள்ள ஊர்களுக்கு இணைப்பு இரயில் மூலமாக செல்லலாம்.  அதேபோல அங்கிருந்து திரும்பவும் விழுப்புரம் வரவும் திரும்ப இணைப்பு இரயில் உள்ளது.

Ex : அறந்தாங்கி - விழுப்புரம் - திருப்பதி - விழுப்புரம் - அறந்தாங்கி 

வண்டி எண்: 20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் விழுப்புரம் செல்லும் நேரம் அதிகாலை 03.50 மணி

விழுப்புரத்தில் இறங்கி ரயில் மாற வேண்டும் 1.30 மணி நேரம் காத்திருக்க வேண்டும் 

வண்டி எண்: 16854 விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் நேரம் காலை 05.30 மணி 

விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக கீழ்க்கண்ட ஊர்களுக்கு செல்லலாம் 

திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு, வேலூர் சிட்டி, வேலூர் காட்பாடி , சித்தூர், திருப்பதி 

அங்கிருந்த திரும்ப‌ ஊருக்கு வருவதற்கு 

16853 திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்
விழுப்புரம் வரும் நேரம் இரவு 08.00 மணி

விழுப்புரத்தில் இறங்கி ரயில் மாற வேண்டும் 2.30 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

20683 தாம்பரம்  - செங்கோட்டை ரயில் விழுப்புரம் வரும் நேரம் இரவு 11.00

பாண்டிச்சேரி (புதுச்சேரி) செல்ல இரு வழிகள் உள்ளன ரயில் & பேருந்து 

ரயில் -  (கடலூர் - விழுப்புரம் - புதுச்சேரி=  80 கீலோ மீட்டர் 

பேருந்து (கடலூர் - புதுச்சேரி=  24 கீலோ மீட்டர் மட்டுமே

பாண்டிச்சேரிக்கு ரயில் மூலம் (விழுப்புரம்)




ரயில் -  (கடலூர் - விழுப்புரம் - புதுச்சேரி=  80 கீலோ மீட்டர் 

Ex : அறந்தாங்கி - விழுப்புரம் - பாண்டிச்சேரி - விழுப்புரம் - அறந்தாங்கி 

வண்டி எண்: 20684 செங்கோட்டை - தாம்பரம் ரயில் விழுப்புரம் செல்லும் நேரம் அதிகாலை 03.50 மணி

விழுப்புரத்தில் இறங்கி ரயில் மாற வேண்டும் 1.25 மணி நேரம் காத்திருக்க வேண்டும் 

வண்டி எண்: 06737 விழுப்புரம் - பாண்டிச்சேரி முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் நேரம் காலை 05.25 மணி 

விழுப்புரம் - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக பாண்டிச்சேரி செல்லலாம் 

அங்கிருந்த திரும்ப‌ ஊருக்கு வருவதற்கு 

06436 பாண்டிச்சேரி - விழுப்புரம் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்
விழுப்புரம் வரும் நேரம் இரவு 08.35 மணி

விழுப்புரத்தில் இறங்கி ரயில் மாற வேண்டும் 2.25 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

20683 தாம்பரம்  - செங்கோட்டை ரயில் விழுப்புரம் வரும் நேரம் இரவு 11.00

பாண்டிசேரிக்கு பேருந்து மூலம் (கடலூர் திருப்பாதிரிப்புலியூர்)




பேருந்து (கடலூர் - புதுச்சேரி=  24 கீலோ மீட்டர் மட்டுமே

* பாண்டிச்சேரி - கடலூர் சாலை மார்க்கமாக வெறும் 24 கீலோ மீட்டர் தான் 

* திருப்பாதிரிப்புலியூர் என்பது கடலூர் ரயில் நிலையத்தின் முக்கிய ரயில் நிலையம் 

* திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் அருகே கடலூர் பேருந்து நிலையம் உள்ளது

* கடலூர் - விழுப்புரம் - பாண்டிச்சேரி செல்ல இப்படி இணைப்பு ரயிலில் கொஞ்சம் செல்ல சுற்று தான் கூடுதல் நேரம் ஆகும்..

* பாண்டிச்சேரி - கடலூர் இடையே விரைவில் ரயில் பாதை அமைகிறது..

* தற்போது பாண்டிச்சேரி செல்பவர்கள் கடலூர் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் நிலையம் அருகே இருக்கும் பேருந்து நிலையம் சென்று எளிதாக பாண்டிச்சேரி செல்லலாம் 

அறந்தாங்கி - திருப்பாதிரிப்புலியூர் - பாண்டிச்சேரி - 
திருப்பாதிரிப்புலியூர்
- அறந்தாங்கி

20684 செங்கோட்டை  - தாம்பரம் ரயில் திருப்பாதிரிப்புலியூர் வரும் நேரம் அதிகாலை 02.51

அங்கிருந்து திரும்ப‌ அறந்தாங்கி வருவதற்கு 

20683 தாம்பரம்  - செங்கோட்டை ரயில் திருப்பாதிரிப்புலியூர் வரும் நேரம் இரவு 11.40

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு ரயில் அதிகாலை & இரவு வருகிறது

பேருந்து நிலையம் செல்லும் போது Time Keeper அவர்களிடம் பாண்டிச்சேரி பஸ் எத்தனை மணிக்கு கேட்டு ஏறுங்கள்...

பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு பேருந்து மூலம் ரயில் நிலையம் வருவதற்கு குறைபட்சம் 1 மணி நேரத்திற்கு வந்து விடுங்கள் 

சுருக்கம் 

* பாண்டிச்சேரிக்கு  செல்ல கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலமாக பாண்டிச்சேரி செல்வது தான் எளிது 

* திருவண்ணாமலை வேலூர் திருப்பதி  செல்ல விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடை அறிவிப்பு கேட்டு இணைப்பு ரயில் மூலமாக  செல்லலாம் 

முக்கிய குறிப்புகள்

* சூப்பர் பாஸ்ட் டிக்கெட்டை வைத்து சூப்பர் பாஸ்ட் & எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யலாம், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டை வைத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே பயணம் செய்ய முடியும், சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணம் செய்ய முடியாது..(தாம்பரம் செங்கோட்டை ரயில் சூப்பர் பாஸ்ட் வகையை சார்ந்தது)

* Unreserved பயணம் என்றால் உதாரணமாக அறந்தாங்கியில் இருந்தே நேரடியாக திருப்பதி பாண்டிசேரி என சூப்பர் பாஸ்ட் டிக்கெட் என்று வாங்கிக் கொல்லலாம் 

* இணைப்பு ரயில்களுக்கு  நேரடியாக நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்திற்கு நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.  நேரடியாக முன்பதிவில்ல டிக்கெட் பெறும்போது ஏற்படும் நன்மைகள்!
மீண்டும் இறங்கி டிக்கெட் பெறவேண்டும் என்ற அவசியமில்லை.

*அறந்தாங்கி ரயில் நிலைய வருவாய் கூடும்.

* அறந்தாங்கியில் இருந்து எந்த பகுதிக்கு நேரடியாக டிக்கெட் பெறப்படுகிறது என்பதை ரயில்வே அறிந்துகொள்ளவும், அதற்கு ஏற்றார் போல அறந்தாங்கி வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை பெற வழிவகுக்கும்.

* ரயில் எங்கே வந்து கொண்டு இருக்கிறது நாம் அறியலாம் ரயில்வயின் அதிகார ஆஃப் NTES App மூலமாக தெரிந்து கொள்ளலாம்..

* நீங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் எங்கே வருகிறது என்று ஆஃப் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் ..

* புகைப்படங்களில் உள்ள மற்ற இணைப்பு ரயில்கள் முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் நீங்கள் எந்த பெட்டியிலும் ஏறலாம்..




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments