கிருஷ்ணாஜிபட்டினத்தில் SDPI கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க தினம்! சிறப்பாக நடைபெற்ற கொடியேற்று நிகழ்வு!!கிருஷ்ணாஜிபட்டினத்தில் SDPI கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட பொதுச்செயலாளர் SAM.முகம்மது அரபாத் தாங்க, கட்சி கொடியேற்றி மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் U.S.செய்யது அஹமது கொடி ஏற்றி பயத்திலிருந்து விடுதலை, பசியிலிருந்து விடுதலை என்ற விழிபுணர்வு உரையாற்றினர்.
மாவட்டத்தில் உள்ள நாகுடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டிணம், மீமிசல் உள்ளிட்ட ஊர்களில்
கோலாகலமாக கட்சியின் துவக்க தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
இறுதியாக நகர செயலாளர் சுல்தான் இப்ராஹிம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தகவல்: செய்யது இபுறாஹீம், கோட்டைப்பட்டினம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments