திருச்சி - காரைக்கால் முன்பதிவில்லாத ரயில் காரைக்கால் - தஞ்சாவூர் முன்பதிவில்லாத ரயில் ஜூலை 3 முதல் நேரம் மாற்றம் தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலின் பயண நேரம் ஜூலை 3 -ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரயில் (எண்: 06880) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூலை 3 முதல் திருச்சியிலிருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 55 நிமிஷங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக, 2.05 மணிக்கு சென்றடையும்.

அதேபோல காரைக்காலிலிருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரயில் (எண்: 06457) ஜூலை 3 முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மைய பகுதி திருச்சியில் இருந்து / வழியாக செல்லும் முன்பதிவில்லாத  ரயில்கள்

திருச்சி - கடலூர் திருப்பாதிரிப்புலியூர்

திருச்சி - விருத்தாசலம்

திருச்சி- மயிலாடுதுறை

திருச்சி - காரைக்கால்

திருச்சி - வேளாங்கண்ணி

திருச்சி - திருத்துறைப்பூண்டி

திருச்சி - மன்னார்குடி

திருச்சி - தஞ்சாவூர்

திருச்சி - காரைக்குடி

திருச்சி - மானாமதுரை

திருச்சி - இராமேஸ்வரம்

திருச்சி - காரைக்குடி - விருதுநகர்

திருச்சி - கரூர் - சேலம் 

திருச்சி - திண்டுக்கல்

திருச்சி - ஈரோடு 

திருச்சி - பாலக்காடு டவுன்

மதுரை - திருச்சி - விழுப்புரம்

மயிலாடுதுறை - திருச்சி - செங்கோட்டை 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments