சென்னை - மும்பை ரயிலில் தீ விபத்து! உடனே ரயிலை நிறுத்தியதால் அலறி ஓடி தப்பிய பயணிகள்






ரயிலை ஒட்டிய லோகோ பைலட் தீ விபத்து ஏற்பட்டதை சரியான நேர்த்தில் அறிந்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்தைத் தவிர்க்கப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்குச் சென்ற லோகமான்ய திலகர் அதிவிரைவு ரயிலில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் எஞ்சினுக்கும் முதல் ரயில் பெட்டிக்கும் இடையே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பற்றியதை அறிந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்து ரயிலில் இருந்து வெளியேறினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று மாலை 6:20 மணி அளவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்து, பெரம்பூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன் இந்த விபத்து நேர்ந்தது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரண்டு பெட்டிகளுக்கு இடையேயான இணைப்புப் பகுதியில் உள்ள பவர் கேபிளில் மின்கசிவு ஏற்பட்டது தான் தீ விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே கூறுகிறது.


ரயிலை ஒட்டிய லோகோ பைலட் தீ விபத்து ஏற்பட்டதை சரியான நேர்த்தில் அறிந்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்தைத் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ அணைக்கப்பட்டதும் ரயிலில் மாற்று எஞ்சின் இணைக்கப்பட்டு ரயில் மீண்டும் மும்பை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றது எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments