கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் புதர் போல் மண்டிக்கிடந்த சீமை கருவேல மரங்கள், குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்!கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் புதர் போல் மண்டிக்கிடந்த சீமை கருவேல மரங்கள், விளையாட்டு மைதானத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளை இளைஞர்கள் சரி செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் அங்கன்வாடி அருகே சீமை கருவேல மரங்கள் புதர் போல் மண்டியும், பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், பள்ளிவாசல் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது.
இந்நிலையில் அவுலியா நகர் பகுதி இளைஞர்கள் JCB இயந்திரம் மூலம் புதர் போல் மண்டி கிடந்த சீமை கருவேல மரங்கள் அகற்றியும், அந்த பகுதியில் காணப்பட்ட பள்ளங்களை சரி செய்தும், மேலும் பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
அவுலியா நகர் பகுதி முகப்பில் இருந்த ஆலமரத்தின் வேர் பகுதி பலம் இழந்து காணப்பட்ட நிலையில் கடந்த 7/09/2021 அன்று திடீர் என வீழ்ந்தது. அதனையடுத்து வீழ்ந்த ஆலமரத்தை அவுலியா நகர் பகுதி இளைஞர்கள் அதே இடத்தில் நட்டு வளர்த்து வந்த நிலையில் துளிர் விட்டு வளர்ந்து வந்தது. ஆனால் சில மாதங்கள் கழிந்த நிலையில் பட்டு போனது. இதையடுத்து அதன் வேர் பகுதி அகற்றப்படாமல் இருந்ததையடுத்து வேர் முழுவதும் அகற்றப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் செய்ய வேண்டிய இந்த பணியை அவுலியா நகர் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களுடைய பொருளாதாரத்தை கொண்டு அசுத்தமாக இருந்த பகுதிகளை சுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுலியா நகர் பகுதியில் பொதுநல பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் சமூக ஆர்வலர் Dr.முகமது ரியாஸின் செயலை GPM மீடியா மனமார வாழ்த்துகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments