மணமேல்குடி அருகே வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமையில் நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கயல்விழி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்துதுதல் வேண்டும் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை தராத மாணவர்களின் பெற்றோரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாணவர் படிப்பை தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு விருது வழங்கப்படுகிறது என்றும், உயர் கல்வி வழிகாட்டல், நான் முதல்வன் திட்டம் பற்றி எடுத்து கூறப்பட்டது.
மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு மாணவர்களை வரவழைக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இப்பள்ளியின் ஆசிரியர் கொடியரசு நன்றி உரை கூறினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பிரியதர்ஷினி செய்திருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments