ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆத்மநாதசுவாமி கோவில்
புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
மாணிக்கவாசகர் தினமும் காலை, மாலை வேளையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் நாள் திருவிழாவில் குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் மாணிக்கவாசகர் வலம் வந்தார்.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் ஆத்மநாதா... மாணிக்க வாசகா... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். காலை 9.50 மணிக்கு ஆத்மநாதசுவாமி கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் 4 வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் மதியம் 12.30 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர் தேரோட்டத்தை யொட்டி 7 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உபதேச காட்சி
இதையடுத்து இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் நடராஜர் அலங்காரத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார். விழாவின் 10-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை வெள்ளி படிச்சட்ட வாகனத்தில் பிச்சாடனார் அலங்காரக்காட்சி, பஞ்சப்பிரகார சேவை காட்சியும், இரவு புதிதாக செய்யப்பட்ட வெள்ளி தேரில் ராஜ அலங்காரத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய உபதேச காட்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையில் ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.