திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தை தீவிபத்து: தனது சொந்த நிதியில் இருந்து நிதியுதவி அளித்த திருப்பூர் எம்எல்ஏ பொதுமக்கள் பாராட்டு


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டை பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த 50 உரிமையாளர்களுக்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலா ரூ.50,000 தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 50 கடை உரிமையாளர்களுக்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க‌.செல்வராஜ் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து தலா 50000 வீதம் 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.

இதைதொடர்ந்து அதே இடத்தில் மீண்டும் கடை அமைத்துக் கொள்ள இடத்தின் உரிமையாளரிடம் பேசி தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் மூலம்  உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாகவும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments